Tamil Cinema News | சினிமா செய்திகள்
முறையான பயிற்சியும், குறையாத ஆர்வமும் இருந்தால் குறிக்கோளை அடையலாம் – விவேக்
Published on

சின்னக் கலைவாணர் என்று நம் தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர். தன் காமெடியிலும் சமூக விழிப்புணர்வு கருத்தை தெரிவிப்பவர். இவர் முன்பு போல், அதிக படங்களில் நடிப்பது இல்லை.
தன்னால் முடிந்த சோசியல் சர்வீஸ், சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்துவது மட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர், மரம் நடுவது பற்றிய நல்ல சிந்தனைகள் மற்றும் போதனைகளையும் பகிர்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தன் ட்விட்டரில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ள வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பார்க்கும் பொழுது, போதிய உழைப்பும், முயற்சியும் செய்தால் எந்த துறையானாலும், தன்னால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரியும்.
