Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்துடன் 12 வது முறை இணைவது பற்றிய மகிழ்ச்சியை ட்வீட் வாயிலாக வெளிப்படுத்திய விவேக்

விசுவாசம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் சிவா அஜித் கூட்டணியில் படம் ரெடி ஆகி வருகின்றது. ஏற்கனவே ஹைதராபாதில் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.
இமான் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த டீம்முடன் விவேக்கும் இணைவதாக தகவல்கள் வெளியாகின.
விவேக் – அஜித் இணையும் 12 வது படமாம் விசுவாசம். இளமை தோற்றத்தில் உள்ள அஜித் கதாபாத்திரத்துடன் தான் விவேக்கின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். காதல் மன்னன், வாலி தொடங்கி சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் வரை இவர் கூட்டணி சூப்பர் ஹிட் தான்.
அஜித்துடன் இணைவது மகிழிச்சியாக உள்ளது என்று விவேக் பதிவிட்ட இந்த ட்வீட் 23000 லைக் மற்றும் 5000 ரி – ட்வீட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
