Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய், அஜித், ரஜினி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த விவேக்.. செம்ம பா இந்த மனுஷன்
சின்னக் கலைவாணர் என்று நம் தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவில் காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் நடிகர் விவேக். முன்பு போல், அதிக படங்களில் நடிப்பது இல்லை.
தன்னால் முடிந்த சமூக சேவை, சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், மரம் நடுவது பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நாளை அப்துல் கலாம் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுங்கள். அந்த போட்டோக்களை சமூகவலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்குமாறும் கூறியுள்ளார்.
நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன். @news7tamil @ThandhiTV @sunnewstamil @Kalaignarnews
— Vivekh actor (@Actor_Vivek) October 14, 2019
