Connect with us

Cinemapettai

நான் அவருடன் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், என்றுமே அவரின் ரசிகன் தான். வெட்டி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த விவேக்.

Cinema News | சினிமா செய்திகள்

நான் அவருடன் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், என்றுமே அவரின் ரசிகன் தான். வெட்டி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த விவேக்.

இந்தியன் 2

ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் – கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில் இணைந்துள்ளார். பொங்கலை முன்னிட்டு, முதல் லுக் போஸ்டர் வெளியானது. பூஜையுடன் 18 ஆம் தேதி ஷூட்டிங் துவங்கியது.

Indian 2

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், கமலுடன் – காஜல் ஜோடி சேர்வது மட்டுமே அதிகாரபூர்வ தகவல். மற்ற நடிகர்கள் பற்றி எந்த தகவலும் வெளியாக வில்லை.

போஸ்டர் வெளியான சமயத்தில் விவேக் அவர்கள் கமல் மற்றும் ஷங்கருக்கு ஆல் தி பெஸ்ட் என ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் முதல் லுக் செம. அழகாக முதல் பரட்டை நமக்கு நினைவு படுத்தியது. இன்றையதேதியில் மிகவும் தேவையான படம். இதற்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் கூறி இருந்தார்.

இயக்குனர் ஷங்கரும் தன் நன்றியை தெரிவித்தார். இந்நிலையில் நெட்டிசன்கள் விவேக் இப்படத்தில் நடிக்கிறாரா ? அல்லது நடிக்க சான்ஸ் கேட்கிறாரோ ? கமலுடன் இணைவாரா என்றெல்லாம் பல தர பேச்சுக்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் நேற்று இது சம்மந்தமாக ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். அதில் “நான் பள்ளி பருவத்தில் இருந்தே கமல் சாரின் ரசிகன் – 1975 அபூர்வ ராகங்கள் ரிலீஸ் ஆன சமயம், நான் சாந்தோம் பள்ளியில் படித்து வந்தேன். அவருடன் இணைந்து செய்தாலும், செய்யாவிடினும் இன்று வரை அவரின் ரசிகன் தான். கதைக்கு நான் தேவை பட்டால், ஷங்கர் சார் கட்டாயம் கூப்பிடுவார். அதோடு இதனை நிறுத்திக்கொள்வோம். ” என்பதே அது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top