Tamil Cinema News | சினிமா செய்திகள்
புத்தாண்டு கொண்டாடப்போவதில்லை! விவேக் உருக்கமான பதிவு
நாளை புதுவருடம் 2017 பிறக்கவுள்ளதால் தற்போது நியூ இயர் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. இருப்பினும் நான் புத்தாண்டு கொண்டாடப்போவதில்லை என அறிவித்துள்ளார் நடிகர் விவேக்.
“முதல்வர் மறைந்ததால் மனப் புழுக்கம்.
முடியவில்லை நடக்கவில்லை பணப் புழக்கம்;
புயல் அடித்து மரம் ஒடித்து வெயில் கொளுத்தும்;
இந்த வேளையில் எங்கிருந்து புத்தாண்டு முழக்கம்?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.
இதன் மூலம் அவர் ஜெயலலிதாவின் இறப்பு, மற்றும் வர்தா புயலால் ஏற்பட்ட சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை என தெரிகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
