ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

sterlite

`வேதாந்தா`

உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது. இதன் கிளை நிறுவனம் தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் உள்ளது.

இது திடீர் போராட்டம் எல்லாம் இல்லை. அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் போராடி வருகிறோம். அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்.

sterlite

குடியிருப்பு பகுதியில் தாமிர உருக்காலை இருப்பதைதான் எதிர்க்கிறோம். அந்நிறுவனத்தின் சூழலியல் தவறுகளை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத, மக்கள் பாதுகாப்பின் மீது அக்கறை கொள்ளாத அரசைதான் எதிர்க்கிறோம் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள் இப்பகுதி போராளிகள்.

sterlite

இந்நிலையில் நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு வேண்டுகோள் விடும் விதமாக பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.