Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெட்டிசன்களால் ஒரே டுவீட்டால் அல்லல்பட்ட விவேக்.! அப்படி என்ன ட்வீட்.?
காமெடி நடிகர் விவேக் போட்ட ஒரு டுவீட்டால் அவரை இணையவாசிகள் திட்டி தீர்த்து விட்டனர்.
தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படுபவர் விவேக். கோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராகவும் இருந்து வருகிறார். லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை தனது படங்களில் அதிகம் பேசியவர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை ரோல் மாடலாக கொண்டு இருக்கும் விவேக் பல லட்சம் அளவிலான மரக்கன்றுகளை தமிழக அளவில் நட்டு இருக்கிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளில் என்றுமே தவறாமல் தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர்.
இந்நிலையில், விவேக் தனது டுவிட்டரில் மாணவர்களுக்காக ஒரு டுவீட்டை வெளியிட்டு இருக்கிறார். அந்த டுவீட்டில், அன்புக்குரிய மாணவர்கள் மற்றும் குழந்தைகளே! உங்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். சிறுமிகளே உங்கள் தாயிற்கு சமையலறையில் உதவியாக இருங்கள். சமையலை கற்றுக்கொள்ளுங்கள். சிறுவர்களே உங்கள் தந்தையுடன் அவர் அலுவலகத்திற்கு சென்று எப்படி உங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார் என பாருங்கள். உறவு வலுப்படும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவீட்டால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கி விட்டனர். ஏன் பெண்கள் சமைக்க மட்டும் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கேள்விகளால் அவரை துழைத்தெடுத்தனர். தொடர்ந்து அதிருப்தி அலை அதிகமாகவே, நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறேன். மதிப்பு மிகு பெற்றோர்கள் புரிந்து கொள்வர். அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம் அவர்கள் புரிதல் அவ்வளவே என பதில் டுவீட்டை அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி!
