Connect with us

Cinemapettai

ஜோதிகாவை புகழ்ந்து, மகளிர் தினத்துக்காக நடிகர் விவேக் பதிவிட்ட ட்வீட் !

Cinema News | சினிமா செய்திகள்

ஜோதிகாவை புகழ்ந்து, மகளிர் தினத்துக்காக நடிகர் விவேக் பதிவிட்ட ட்வீட் !

விவேக்

சின்னக் கலைவாணர் என்று நம் தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர். தன் காமெடியில் நல்ல கருத்துக்களை சொல்பவர், அதிகாரிகள் செய்யும் தவறுகளை, சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அழுத்தமாக சுட்டிக் காட்டுபவர்.

Vivek

மனிதர் முன்பு போல், அதிக படங்களில் நடிப்பது இல்லை. எனினும் தன்னால் முடிந்த சோசியல் சர்வீஸ், தன் பங்கிற்கு சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அதுமட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் பற்றிய நல்ல சிந்தனைகள் மற்றும் போதனைகளையும் ஷேர் செய்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தன் ட்விட்டரில் மகளிர் தினத்தன்று ஜோதிகா பற்றி ட்வீட் செய்துள்ளார்.

Jo

ஜோதிகா

மார்ச் 8

twitter

“பார்த்திபன் அவர்களின் மகள் திருமணத்தில் ஜோதிகா மேடத்தை சந்தித்தேன். அவர் இனிமையாக, கனிவாக தன்னம்பிக்கையுடன், சிரித்துக்கொண்டு இருந்தார். அவர் மனைவியாக, அம்மாவாக, மேற்பார்வையாளராக, தற்பொழுது மீண்டும் நடிகையாக பல சாதனைகளை படைத்துள்ளார். உலக மகளிர் தினத்தன்று அவரை சந்தித்தேன். பல பெண்களுக்கு இவர் பெரிய இன்சிபிரஷன் தான்.” என்று தன் மனதில் பட்ட கருத்தை பதிவிட்டுள்ளார் விவேக்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top