fbpx
Connect with us

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் வேண்டுகோள் வைத்த விவேக் ! நிறைவேற்றுவாரா ?

News / செய்திகள்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் வேண்டுகோள் வைத்த விவேக் ! நிறைவேற்றுவாரா ?

ஏ ஆர் ஆர்

பல வருடங்களாகவே இசைப்புயல் இந்தியாவை நோக்கி மையல் கொள்வதை தவிர்த்துவிட்டார். வெளிநாடுகளில் ட்ராமா, சினிமா, கான்செர்ட் என்று தன்னை ஈடுபடுத்தி வந்தார்.நல்ல கதை அல்லது மிகவும் நெருங்கிய இயக்குனர், ஹீரோ அல்லது தயாரிப்பாளர்கள் படத்தில் மட்டுமே இங்கு இந்தியாவில் கம்மிட் ஆகிறார்.

ARR

விவேக்

நகைச்சுவை வாயிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று கலைவாணரிடம் கற்றவர். தற்பொழுது காமிடியன் ரோல் அதிகம் செய்வதில்லை, குணச்சித்திர வேடங்களுக்கு முக்கிய துவம் கொடுக்கிறார். மேலும் மாணவர்களை ஊக்குவிப்பது, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க மரம் நடுவது என்று தன்னை சினிமா தவிர்த்து பிஸி ஆக்கி கொண்டுள்ளார்.

சமீபத்தில் ரஹ்மான் தான் நார்த் அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் / செப்டம்பர் இசை சுற்றுப்பயணம் செல்வதாக ட்விட்டரில் பதிவிட்டார்.

உடனே விவேக் அதற்கு கமெண்ட் செய்தார் “அன்புள்ள ஏ ஆர் ஆர் வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் இசை பயணத்துக்கு ஆல் தி பெஸ்ட். குழந்தைகளை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை எதிரான வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல் ஒன்றை தேவை. நீங்கள் அதனை பாடும் பட்சத்தில் ஆன்மாவின் குமுறலை, ஆழ்மனதின் கண்ணீரை வெளிப்படுத்தும் விதமாக அது இருக்கும். ” என்று கேட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பலரும் விவேக்கின் இந்த கருத்தை ஆமோதித்து வருகின்றனர். செவி சாய்ப்பரா ரஹ்மான், காத்திருப்போம்.

https://twitter.com/Sidya42053278/status/997051282526420993

https://twitter.com/nkbkumar/status/997043164849487875

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top