இப்போது சினிமா மேடைகள் பல, படத்தை பற்றி சொல்கிறதோ இல்லையோ? ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்துகிறது.

“விவேக் ரிட்டன்ஸ்…” என்பதுதான் அது. எப்படி வடிவேலு மீண்டும் சுதாரித்துக் கொண்டு விட்ட இடத்தை பிடிக்கும் நோக்கத்தோடு உள்ளே புகுந்துவிட்டாரோ… அதுபோலவே விவேக்கும் கிளம்பிவிட்டார். இன்று துவங்கப்பட்ட திருட்டுப்பயலே பார்ட் 2 வரைக்கும் விவேக்கின் பட எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய விவேக் நேரத்தை அதிகம் சாப்பிட்டாலும் யூ ட்யூப் ரசிகர்களுக்கு செம தீனி போட்டார் என்பதுதான் உண்மை. ரம் என்றால் தூய தமிழில் தீர்ப்பு என்று அர்த்தமாம். (அப்ப வரிவிலக்கு உண்டு)

அதிகம் படித்தவை:  குள்ள மனிதனாக ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில், டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே ! !

நான் தீவிரமான இளையராஜாவின் ரசிகன். வேறு யாரையும் இசையமைப்பாளர்னு ஒத்துக்கவே மாட்டேன். பல வருஷங்களுக்கு முன் இயக்குனர் சிகரம் பாலசந்தர் என்னை கார்ல கூட்டிட்டு போனார். போகும்போதே ஒரு பாடலை போட்டு கேட்க சொன்னார். “எப்பிடிடா இருக்கு?” என்றவரிடம், “இதென்ன சார்… சின்னப்பசங்க ரைம்ஸ் பாடுற மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். “எளிமையா இருக்குல்ல? அதுதான் வேணும்”னு சொன்னார். அன்று அவர் போட்டுக் காட்டிய பாட்டு, திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்ச பாட்டு. அப்பவே அவர் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என்று நான் நம்பினேன்.

அதிகம் படித்தவை:  நெட் சென்டர்களுக்கு உங்கள் பெண் பிள்ளைகள் போகிறதா..? நித்யாவிற்கு ஏற்பட்ட பயங்கரம்!

நான் அப்படி நம்பிய பலர் இன்று சினிமாவில் முக்கிய இடத்திலிருக்கிறார்கள். அனிருத் இன்று இளைஞர்களின் உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார். என்னோட செல்லம் அவர். அனிருத் எளிமையானவர் என்பதற்கு உதாரணமா ஒரு விஷயம் சொல்லணும். நான் நடிச்ச ஒரு படத்தில் ஒரு பாடல் பாடணும் என்று அவரை அழைத்தேன். கார் அனுப்புங்க வர்றேன் என்று சொல்லாமல், அவரே தேடிப் பிடிச்சு அந்த இடத்துக்கு வந்துட்டார். அப்படியொரு மனசு அவருக்கு என்றார்.

ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட விவேக், “இந்தப்படத்தில் அனிருத்துங்கிற ஒருத்தர் இருப்பதுதான் முதல் பெருமை” என்று முடித்தார்.