ஆர் கே

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்கே. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னரே பிசினஸ்மேன் தான். ரியல் எஸ்டேட், பியூட்டி ப்ரொடெக்ட்ஸ், ஹோட்டல் என பல துறைகளில் தன் தடம் பதித்தவர். வெல்கம் சிட்டி ரியல் எஸ்டேட் பிசினெஸ் மற்றும் வி கேர் நிறுவனத்தை இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றார்.

Sameer Kochar – RK – Vivek Oberoi

வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு “விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” . தற்பொழுது புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே. இந்த ஷாம்பூவின் பிராண்ட் அம்பாஸடர் ஆக விவேக் ஓபராய் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.

V CARE shampoo

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்து செல்லவே இந்த முயற்சி. மேலும் இந்த அறிமுக விழாவின் பொழுது ஐபில் வர்ணனை செய்யும் சமீர் கோச்சாறும் கலந்துகொண்டார்.

vivek oberoi

நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, “இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது. ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆர்கே என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன். நான் நம்பும் விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்


இந்த ஷாம்பூவின் காரணத்தால் தான் கடந்த ஒரு வருடமாக படத்தில் கூட நடிக்கவில்லையாம் ஆர்கே . இனி மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்ட படம் ஒன்றில் நடிக்க போகிறாராம். அந்த படத்தில் சோசியல் மெஸஜும் இருக்குமாம். அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும் என்கிறார் ஆர்கே.