Connect with us

Cinemapettai

ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜீத் – பிரச்சனை தெரியாமல் பேசிய விவேக் ஓபராய்

vivek-oberoi-to-play-ajith-kumar

Cinema News | சினிமா செய்திகள்

ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜீத் – பிரச்சனை தெரியாமல் பேசிய விவேக் ஓபராய்

அஜீத் ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் வில்லனை பாலிவுட்டில் இருந்து அழைத்து வந்துள்ளனர். அந்த வில்லன் வேறு யாரும் அல்ல மணிரத்னத்தின் அலைபாயுதே இந்தி பதிப்பில் ஹீரோவாக நடித்த விவேக் ஓபராய் தான். முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜீத்துடன் என் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறேன். நான் அவரை அஜீத் அண்ணா என்று தான் அழைப்பேன் என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

பாவம் விவேக் ஓபராய்க்கு தமிழகத்தில் நடக்கும் சூப்பர் ஸ்டார் சண்ட பற்றியும் அது அஜீத்துக்கு பிடிக்காது என்பதும் தெரியாமல் ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார்.

ஏதோ பாலிவுட்காரர் கோலிவுட் பற்றி தெரியாமல் அஜீத்தை சூப்பர் ஸ்டார் என மனதில் பட்டதை சொல்லிவிட்டார். இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top