நடிகர் விவேக் மரணத்தில் திடீர் திருப்பம்.. தடுப்பூசியா இல்ல நெஞ்சுவலி காரணமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விவேக். இவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். இவரது காமெடி ஏதேனும் ஒரு சமூக கருத்தை மையப்படுத்தி இருப்பதால், சிரிப்பதோடு மக்களை சிந்திக்கவும் வைக்கும். இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த நடிகர் விவேக் சில மாதங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். தடுப்பூசியின் பக்க விளைவு காரணமாகவே நடிகர் விவேக் உயிர் இழந்ததாக பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். இருப்பினும் அந்த சமயத்தில் இது பெரிய பிரச்சினையாக எழவில்லை.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் மரணமடைந்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

vivek-001
vivek-001

அதன்படி நடிகர் விவேக் மரணம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. அவரின் மரணம் உண்மையில் தடுப்பூசி காரணமாக நிகழ்ந்ததா? அல்லது நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தாரா? என்ற விவரங்கள் விசாரணைக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்