Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய்.. வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்

விவேக், விஜய், அட்லீ மற்றும் ஏ ஜி எஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக சொல்லி இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

தளபதி 63

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு. எடிட்டிங் ரூபன். அனல் அரசு ஸ்டன்ட், டி.முத்துராஜ் கலை இயக்குநர் போன்ற டெக்கனிகள் விவரங்களை பட பூஜை சமயத்திலேயே அறிவித்தனர்.

பின்னர் ஹீரோயினாக நயன்தாரா, கதிர் , யோகி பாபு இணைவது என பல அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல தான் சின்னக்கலைவாணர் விவேக் இணைகிறார் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் தட்டி விட்டது.

உடனே இயக்குனர் அட்லீ “தளபதி 63யில் விவேக் சார் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், அவரின் கருத்துள்ள நகைச்சுவைக்கு நான் எப்பொழுதுமே ரசிகன். அவருடன் பணி புரிவது என்னுடைய நீண்ட நாள் ஆசை. மகிழ்ச்சியாக உள்ளது.” என்று டீவீட்டினார்.

விவேக்கும் தானும் விஜய், அட்லீ மற்றும் ஏ ஜி எஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக சொல்லி இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top