உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக விவேகம் செய்த விஷயம்..

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. செர்பியா, பல்கேரியாவில் இதுவரை எந்த படத்திலும் வராத லொகேஷனில் இப்படத்தை எடுத்துள்ளார்களாம்.

அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கே தெரியாத பல இடங்களை விவேகம் படத்தில் மட்டும்தான் பார்க்கமுடியுமாம். ஏனென்றால் அந்த இடங்களுக்கு செல்ல மக்களுக்கே அனுமதி இல்லையாம். அப்படிப்பட்ட இடத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து அனுமதி வாங்கியுள்ளார் சிவா.

Comments

comments