சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10 ரிலீஸ் என்று சொல்லப்பட்டதை நம்பி அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். விவேகம் வெளியீட்டை விமரிசையாக கொண்டாடும் வேலைகளில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர்களின் உற்சாகத்தை குறைத்துவிட்டது நேற்று வந்த அறிவிப்பு.ajith

படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10 அன்று ரிலீஸ் இல்லை, மாறாக ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். ஆகஸ்ட் 24 ல் ரிலீஸாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதிகம் படித்தவை:  ஏ.ஆர்.ரஹ்மான் மனசுக்குள் இல்லாமல் போனாரா ஜி.வி.பிரகாஷ்?

இந்த செய்தியை படத்தின் இயக்குனர் சிவாவும், படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸும் டுவீட் செய்து உறுதிப்படுத்தினார்கள். திங்கள் கிழமை அன்று தணிக்கைக்குழுவினர் விவேகம் படத்தைப் பார்த்தனர். வன்முறை அதிகம் என்ற அடிப்படையில் ‘விவேகம்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் தந்துள்ளனர்.Ajiths-Vivegam-release

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் இதுவரை அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்களின் லிஸ்ட்.! ரஜினி, அஜித், விஜய் படங்கள் எந்த இடத்தில் தெரியுமா.!

ஆகஸ்ட் 24 அன்று படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது ஏன்? இடைப்பட்ட காலத்தில் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று யு சான்றிதழ் வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாகவே விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்கள் தள்ளி அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.