அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளிவரவுள்ள விவேகம் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், படத்தை பற்றி வெளி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது.

அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது, படத்தின் ட்ரைலர் ரசிகர்களை தாண்டி சினிமா ரசிக்கும் பலருக்கும் பிடித்துள்ளது.

இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் ஆகி 10 நிமிடத்தில் ஐம்பதாயிரம் லைக்ஸும் அரைமணி நேரத்தில் 1லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் விவேகம் ட்ரைலர், டீஸர் சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.