விவேகம் டீசர் வெளிவந்து பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றது. இந்த டீசரில் அஜித் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர் போல் தெரிகிறார்.

அதை தொடர்ந்து அவர் அவர்களை பழிவாங்கும் கதை என தெரிகின்றது, இந்நிலையில் இந்த டீசரில் ஒரு விஷயத்தை சிவா மறைமுகமாக கூறியுள்ளார்.

இதில் வரும் மூன்று ஷாட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை என இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தை மறைமுகமாக காட்டியுள்ளனர்.

இதன் மூலம் அஜித் இந்தியாவின் ஸ்பையாக பல்கேரியா சென்றிருப்பார் என தெரிகின்றது.