Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் டீசர் – கவுன்ட் டவுன் ஆரம்பம்…

எதிர்பார்ப்புகளை எகிற வைப்பதில் தமிழ்த் திரையுலகினரை மிஞ்ச ஆளே கிடையாது. எதையாவது புதிது புதிதாகச் செய்து ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருப்பார்கள். கடந்த மாதம் பாகுபலி 2 படம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு இந்த மாதம் விவேகம் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வெளியாகவில்லை. அதன் பின்னர் மே 18ம் தேதி டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தேதியை மாற்றி மே 11ம் தேதி வெளியாகும் என்றார்கள்.

இன்று இரவு 12 மணிக்கு, மே 11ன் முதல் மணித் துளியில் விவேகம் டீசர் வெளியாக உள்ளது. யு டியூபில் வெளியாக உள்ள இந்த டீசருக்கு சற்று முன்னர் கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை எந்த ஒரு படத்திற்காவது இப்படி கவுன்ட் டவுன் போட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதற்குள் அந்த யு டியூப் பக்கத்தின் கமெண்ட் பகுதியில் அஜித் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கமெண்ட்டு மழையாகப் பொழிய ஆரம்பித்துவிட்டார்கள்.

 

இன்னும் சில மணி நேரம் இருக்கிறது..அதற்குள்ளாகவா….என சிலர் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top