‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு (2016) வெளியான படம் ‘கபாலி’. பா.இரஞ்சித் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கிஷோர், தினேஷ், வின்ஸ்டன் சாவ், கலையரசன், தன்ஷிகா, ஜான் விஜய், மைம் கோபி, ரித்விகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். தற்போது, இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ‘சன் டிவி’யே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஹீரோவாக நடித்து வரும் ‘காலா’ படத்தையும் பா.இரஞ்சித் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித் குமார் நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் வந்திருக்கும் மற்றுமொரு மாஸ்-கிளாஸ் ஆக்ஷன் படம் தான் “விவேகம்”.பல கலவையான விமர்ச்சனங்களை தாண்டி வசூலில் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, இது வரை யாரும் பார்த்திராத லொகேஷன்கள், அசர வைக்கும் அஜித்தின் பங்களிப்பு என சில நல்ல விஷயங்களை முன்னிறுத்தினாலும், எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை படத்தின் காலை வாருகிறது. அஜித்தின் விவேகம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ‘சன் டிவி’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து, தெலுங்கிலும் தமிழிலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் ஸ்பைடர். கத்தி படத்திற்குப் பிறகு, முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவரும் படம் என்பதாலும் இந்தப் படம் குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது.spyder teaser

இயக்குனர் ஏர். ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரிலையன்சு, லைக்கா நிறுவன தயாரிப்பில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில்  வெளிவந்த இரு மொழித் திரைப்படம் ஸ்பைடர். இதில் மகேஷ் பாபு, பரத், எஸ் ஜே சூர்யா, நதியா, ஆர் ஜெ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கார்கள். மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், சிறீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றுனார்கள். இப்படம் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ‘சன் டிவி’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி குவித்து வருகிறது சன் உரிமம், சீரியல் என்றால் சன் டிவி அந்த பெயர் போய் இனி புதுப்படம் என்றால் சன் என்ற பெயர் வந்ந்துடும் போல.