vivegam

படம் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி லைக்ஸ் குவித்து வருகிறது. ‘விவேகம்’ படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல், ‘சர்வைவா’. யோகிபி பாடிய இந்தப் பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே வைரலானது.comedian in vivegam

இரண்டாவதாக வெளியான பாடல், ‘தலை விடுதலை’. இயக்குநர் சிவா பாடல் வரிகளை எழுத அனிருத், ஹ்ரிஷ் சுவாமிநாதன் பாடியிருந்தார்கள். இந்தப் பாடலும் ரசிகர்களில் பேராதரவைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘காதலாட’ தற்போது வெளியாகிவுள்ளது. கபிலன் வைரமுத்து வரிகள் எழுத, இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஷாஸா த்ருப்பாதி, பிரதீப் குமார் பாடியுள்ளனர். வெளியான குறைந்த நிமிடங்களிலிருந்தே இந்தப் பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

‘காதலாட’ பாடலின் வரிகள்:

உன்னோடு வாழ்வது ஆனந்தமே..
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..
தீராத தேவைகள் ஆனந்தமே..
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே..

பல்லவி

காதலாட காதலாட காத்திருந்தேனே..
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..

செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே

ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே…

சரணம்

நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்
நீ கொடுப்பாயே…

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே..
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே..