fbpx
Connect with us

விவேகம் சென்சார் முடிந்தது! என்ன சான்றிதல் தெரியுமா?

vivegam

News | செய்திகள்

விவேகம் சென்சார் முடிந்தது! என்ன சான்றிதல் தெரியுமா?

அஜித்தின் விவேகம் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Ajiths-Vivegam-release

முன்னதாக இந்தப் படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். படத்துக்கு யு ஏ சான்று வழங்கியுள்ளனர்.அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் சான்று கிடைப்பது தாமதமானதால், ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. சென்சார் குழு நேற்று படம் பார்த்தது. படத்துக்கு யு ஏ சான்று வழங்கியது. சென்சார் சான்று கிடைத்த உடனே தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் .

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 24-ம் தேதி விவேகம் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் மிகவும் உச்ச கட்ட கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத் தளங்களில் விவேகம் பட ரிலீஸ் தேதி வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top