அஜித்தின் விவேகம் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வசூல் பெற்று வெற்றிப்படமாக உள்ளது என்று சர்வதேச அளவில் உள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை முதல் லோக்கல் பத்திரிகை வரை செய்தி வெளியிட்டுவிட்டது.

இருப்பினும் ஒருசில ஊடகங்கள் மட்டும் தொடர்ந்து விவேகம் படத்திற்கு கூட்டம் குறைந்துவிட்டது, வசூல் குறைந்துவிட்டது என்று செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் வெளியானதால் இந்த படத்தை முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 50% ரசிகர்கள் பார்த்து முடித்திருப்பார்கள். மீதமுள்ள இரண்டு வாரங்களில் இந்த படத்தை சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள்.

எனவே இந்த படம் வசூல் அளவிலும் வெற்றி பெற்றது உண்மைதான். இனியும் வாங்கிய காசுக்கு உண்மையாக வேலை பார்க்கின்றோம் என்ற பெயரில் விவேகம் படத்திற்கு நெகட்டிவ் செய்திகளை போடாமல் வேற வேலை இருந்தால் பார்க்கவும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.