யார் கிளப்பி விட்டதோ தெரியவில்லை விவேகம் படத்தை பற்றி தாறுமாறு விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் ப்ளூ ஷர்ட் மாறன் படத்தை பார்த்தாரா என்றே தெரியாத அளவுக்கு விமர்சனம் பண்ணிருந்தார். ஆமாம் இவரும் எதாவது பண்ணி நாலு காசு பார்க்க வேணாமா?. விவேகம் முடிவில் பல தெளிவுகள் வந்துருக்கு பல புள்ளிகளுக்கு..

vivegam teaser releasedஇந்த அமளி துமளிகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவரது நேர் போட்டியாளரான விஜய்யை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறதாம் விவேகம் ரிசல்ட். ஏன்? இதே சாயலில் கவுதம் மேனன் ஒரு கதையை விஜய்யிடம் சொல்லி, அதை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தன் சிறு மூளை பெரு மூளை இரண்டையும் உபயோகித்து “இந்த மாதிரி கதையெல்லாம் எங்க பேன்ஸ்சுக்கு செட் ஆகாது” என்று நைசாக ஒதுங்கிவிட்டார் விஜய்.

vijay as cmஇப்போது விவேகம் படத்தை ரசித்த(?) விஜய், “நல்லவேளை தப்பிச்சுட்டேண்டா சாமீய்” என்கிறாராம் தன் நண்பர்களிடம். இதே போல சந்தோஷப்படும் இன்னொரு ஜீவன், கவுதம் மேனன்!