News | செய்திகள்
சினிமா வரலாற்றிலேயே ,ரஜினியின் கபாலிக்கு கிடைக்காத பெருமை விவேகத்திற்கு கிடைத்தது.
தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ திரைப்படம் வரும் வியாழன் முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சற்று முன்னர் சென்னையில் உள்ள ஒருசில திரையரங்குகளில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டு சில நொடிகளில் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்துவிட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் பிரமாண்டமாக வெளிவந்த படம் கபாலி. இப்படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரிலிஸானது.
ஓவர்சீஸில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த படம் கபாலி தான். இந்நிலையில் விவேகம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் இதுவரை தமிழ் சினிமா ரிலிஸே ஆகாதா நாடான, Hungary, Malta ஆகிய நாடுகளில் ரிலிஸ் ஆகின்றதாம், கபாலி கூட இந்த பகுதிகளில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
