Connect with us
boomerang-movie

உறுதியான விவேகம் ரிலீஸ் தேதி – இந்த செண்டிமெண்ட்டை கவனித்தீர்களா?

Vivegam-Release Date

உறுதியான விவேகம் ரிலீஸ் தேதி – இந்த செண்டிமெண்ட்டை கவனித்தீர்களா?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை பல்கேரியாவில் தொடங்குகிறது. இதற்காக அஜித் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்கேரியா புறப்பட்டு சென்றார். திட்டமிட்டப்படி படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அஜித் – சிவா கூட்டணி இதற்கு முன்பு இணைந்த வீரம் படம் ஜனவரி 10-ம் தேதியும் வேதாளம் நவம்பர் 10-ம் தேதியும் வெளியானது. தற்போது விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. மூன்று தேதிகளுமே வியாழக்கிழமையில் வருவது இன்னும் ஸ்பெஷல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top