வீரம் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வருகிறது விவேகம். ஃபர்ஸ்ட் லுக்குக்கே தெறிக்கவிட்ட ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பகுதிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் உள்நாட்டுக் காட்சிகளை இங்கே விரைவில் தொடங்கவிருக்கிறார்களாம். படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ல் ரிலீஸ் செய்யலாம் என்று ஒரு ஐடியா இருந்திருக்கிறது.

விஜய் நடிக்க அட்லீ இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்த நாளுக்கு தான் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே ஜுன் 22 ல் பாடல்களை வெளியிட்டுவிட்டு படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்பது இப்போதைய திட்டமாம். இதில் ஏதாவது மாறுதல் வருமா? என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.