‘வேதாளம்’ படத்தின் வசூலை விவேகம் படத்தின் வசூல் முறியடித்துள்ளது.
அஜீத் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேதாளம்’ படம் தான் முதலிடத்தில் இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 120 கோடி ரூபாய்.

அந்த வசூலை ‘விவேகம்’ படம் ஒரே வாரத்தில் முறியடித்துள்ளது.
’விவேகம்‘ படம் கடந்த வாரம் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஒருவார முடிவில் இதுவரை 125 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை 64 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு ஏரியாவில் லாபத்தைத் தர குறைந்தது 25 கோடியாவது இன்னும் வசூலிக்க வேண்டுமாம்.Vivegam-Vedhalam

அதே சமயம், மற்ற மாநிலங்களில் இப்படம் லாபத்தைக் கொடுத்து வருகிறதாம். கர்நாடக மாநிலத்தின் வினியோக உரிமை சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. வசூல் ஒரு வாரத்தில் 10 கோடியைக் கடந்துள்ளது.
தெலுங்கு உரிமை சுமார் 4 கோடிக்கு விற்கப்பட்டு வசூல் 7 கோடியைத் தாண்டியுள்ளது.

கேரளாவில் சுமார் 3 கோடிக்கு விற்கப்பட்ட படம் 4.5 கோடி வசூலித்துள்ளது.
படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலித்ததே ‘விவேகம்; படத்திற்கு சாதனைதான்.