விவேகத்தின் இந்த ஒரு சாதனையையும் முறியடித்த மெர்சல்.!!! அடுத்து கபாலி சாதனைதான்..!

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் தான் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பார்சிலோ கிளம்பி சென்றார் விஜய். இப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்தநாளையொட்டி (செப்., 21) மாலை சரியாக 6மணிக்கு வெளியிடப்பட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் ‘விவேகம்’. அஜித்தின் 57-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறினார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாராகியிருக்கிறது எனச் சொல்கிறது படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘விவேகம்’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளிவந்ததது அனைவரும் அறிந்ததே.

அஜித் நடித்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘விவேகம்’ படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர்  நள்ளிரவு 12.01-க்கு வெளியானது. வெளிவந்து பல சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

மெர்சல் படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது. மிக விரைவில் 1 மில்லியன் லைக்ஸுகளை இந்த டீசர் பெறவுள்ளது. இந்நிலையில் தற்போது விவேகம் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

விவேகம் டீசர் இதுவரை 21 மில்லியனை கடக்க, மெர்சல் டீசர் 24 மில்லியனை கடந்து விட்டது. குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

கபாலிக்கு பிறகு அதிக ஹிட்ஸ் அடித்த டீசர் மெர்சல் டீசர் தான், கபாலி 33 மில்லியனுக்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது, இதையும் மெர்சல் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். டீசர் இவ்ளோ சாதனை படைக்கிறது மெர்சல் படம் எவ்ளோ சாதனை படைக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments