Ajith-Siva-Vivegam

அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் என இரண்டு படங்கள் வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் தான்.

அப்படியிருக்க, மீண்டும் இவர்கள் மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் இணைந்துள்ளனர், இந்த படம் ஆரம்பிக்கும் போது 70% படப்பிடிப்பு வெளிநாட்டில் என முடிவு செய்தார்கள்.

ஆனால், கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு நேற்று தான் பல்கேரியா சென்றது, இதன் மூலம் 90% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் நடக்கவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

ஏனெனில் படம் தயாரிப்பாளர் எதிர்ப்பார்த்தது போல் உள்ளதாலும், விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வியாபார போட்டி இருப்பதாலும், படத்தின் பட்ஜெட் அதிகமானாலும் பரவாயில்லை, படம் ரிச் லுக்கில் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்களாம்.