இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் விவேகம் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பட தலைப்பு கடந்த பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்பட்டன.

அஜித்தின் பிறந்த நாளான கடந்த மே 1ம் தேதி விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் பல்கேரியாவில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் டீசர் அப்போது வெளியிட முடியவில்லை என படக்குழு தெரிவித்தது.

அதிகம் படித்தவை:  மகளின் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ஸ்ரீதேவி

இருந்த போதிலும் அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த படக்குழு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற மே 18ம் தேதி விவேகம் படத்தின் டீசர் வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.அன்றைய தினம் பாகுபலி 2 படத்தின் டிரைலர் சாதனையையும் முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…