ajith

‘விவேகம்’ படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அஜித் டப்பிங் பேச வேண்டியதுதான் பாக்கி. மேலும், அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன. மேலும், அஜித்தின் கால்சீட்டுக்காக மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு தல58 வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள்.

அஜித் தின் அடுத்த படத்தை இயக்கம் இயக்குனர் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.அஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லர் வீடியோ 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

வெளியான 43 மணிநேரம் 57 நிமிடத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்ற முதல் இந்திய படத்தின் ட்ரெய்லர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளது. மேலும், 4 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், சற்று முன் வரை விவேகம் படத்தின் டீசர் 19,615,281 பார்வையாளர்கள் பெற்று 2 கோடி பார்வையாளர்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.