தலையின் விவேகம் நாடு முழுவதும் ரிலீஸ் ஆகிறது ,அஜித் நடிப்பில் விவேகம் இன்னும் 2 நாட்களில் வருகின்றது. இப்படத்தின் முன்பதிவு அனைத்து இடங்களிலும் பரபரப்பாக நடந்து வருகின்றது.‘விவேகம்’ ட்ரெய்லரை பார்த்தால், எதையும் யூகிக்கும்படி இல்லை! 

இந்நிலையில் கேரளாவில் 300 திரையரங்குகளுக்கு மேல் விவேகம் வரவுள்ளது, இதில் குறிப்பாக திருவனந்தபுரத்தில் ஒரே நாளில் 50 ஷோ திரையிடவுள்ளார்களாம்.

இதற்கு முன் அதிகப்பட்சமாக கபாலி 48 ஷோ, பாகுபலி-2 44 ஷோ, தெறி 44 ஷோ முறையே திரையிடப்பட்டதாம்.

இதன் மூலம் அஜித்தின் மார்க்கெட் மெல்ல கேரளாவிலும் உயர்ந்து வருவது தெரிகின்றது.அஜீத்தின் கம்பீரமான ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் தியேட்டர் கதி கலங்கப் போவது மட்டும் நிச்சயம்!