vivegam

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவில் 12.01 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது.வெளியான சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்த இந்த டிரைலர் 12 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை அள்ளி புதிய சாதயையைப் படைத்திருக்கிறது. இவ்வளவு குறைந்த நேரத்தில் வேறு எந்த டிரைலரும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை.

12 மணி வரை 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த டிரைலருக்குக் கிடைத்துள்ளன.பல திரையுலக நட்சத்திரங்கள் படத்தின் டிரைலரைப் பாராட்டி, வாழ்த்தி வருகிறார்கள்.

24 மணி நேரம் முடிவதற்குள் மேலும் பல புதிய சாதனைகளை இந்த டிரைலர் படைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.