அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருக்கிறது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்பது மட்டும் சரியாக தெரியவில்லை.

பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சென்னையில் டப்பிங் வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Band Of Brothers போஸ்டரை போல் இந்த புகைப்படம் உள்ளது என கூறிவருகின்றனர்.