அஜித் நடிப்பில் ரூ 100 கோடி செலவில் உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தின் வியாபாரம் தொடங்கி பலரும் படத்தை வாங்க போட்டிபோட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சத்யஜோதி நிறுவனம் இதற்கு முன் தயாரித்த தொடரி படுதோல்வியடைந்தது, இதனால், சில விநியோகஸ்தர்கள் நீங்கள் அந்த படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த படத்தை ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என கூறியுள்ளார்கள், இதற்கு சத்யஜோதி நிறுவனம் ‘எதுவாக இருந்தாலும் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்துக்கொள்கிறோம்’ என கூறிவிட்டார்களாம்.

கடந்த ஒரு சில வருடங்களாக முன்னணி நடிகர்களில் அஜித் படம் மட்டுமே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வருவது குறிப்பிடத்தக்கது.