அஜித் ரசிகர்கள் எப்படா இந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வரும் என காத்துகொண்டிருகிறார்கள். காரணம், விவேகம் படத்தின் ரிலீஸ் நாள். இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவரும் அஜித்தின்படம். ஒரே இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள முதல் பாடம். அஜித்தின் ஃபிட் லுக். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள படம். என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளிவருகிறது விவேகம்.

சற்று முன் இந்த படத்தின் ரன்னிங் டைம் எனப்படும் படத்தின் நீளம் வெளிவந்துள்ளது. படக்குழு அறிவித்தபடி 2 மணிநேரம் 27 நிமிடம் விவேகம் படத்தின் ரன்னிங் டைம்.பாடத்தின் வேகத்தை கருத்தில் கொண்டு படத்தின் நேரத்தையும் சுருக்கி இருக்கிறார் சிவா. வீரம் திரைப்படம் 2 மணி நேரம் 41 நிமிடம் ஓடியது. வேதாளம் திரைப்படம் 2 மணி நேரம் 35 நிமிடம் ஒடியது. தற்போது விவேகம் இரண்டரை மணி நேரத்திற்கு மூன்று நிமிடம் குறைவாகவே ஓடவுள்ளது.comedian in vivegam

விவேகம் கதைப்படி, நேரம் தான் கதையின் கரு. ஒரு குறுகிய நேரத்தில் கதாநாயகன் எப்படி ஒரு குறிப்பிட்ட வேலையை கணக்கச்சிதமாக முடிக்கிறார் என்பது தான் படத்தின் சுவாரஸ்யம்.முன்னதாக, ஆரம்பம் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் எதிரியின் கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றுவர் அஜித். ஆர்யா வங்கியின் சர்வரை பழுது பார்க்கும் தொழிளியாக சர்வைரை ஹேக் செய்து அஜித்திற்கு துணைபுரிவர். ஆனால், அஜித் அந்த எதிரியின் இடத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள் இருந்து அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிப்பார்.அந்த பத்து நிமிடத்தில் பல கேள்விகளை கேட்டு அஜித்தை துளைத்தெடுப்பார் எதிரி. அதனை அப்படி இப்படி என அஜித் சமாளிப்பார்.

அப்பயான காட்சிகள் நிறைந்தது தான் இந்த படம். இதனாலேயே, படத்தின் டைட்டில் லோகோவை கூட டிஜிட்டல் கடிகாரத்தில் வரும் எழுக்களை போல டிசைன் செய்துள்ளார்கள். ஒரு மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட விபரீதமான பணியை வேகமாக மட்டுமில்லாமல் எப்படி விவேகமாக முடிக்கிறான் என்பதை சொவ்லதே இந்த விவேகம்.