மெர்சல் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது. இது வேற லெவல் படம். தமிழ் சினிமாவுக்கு இதுபோன்ற படங்கள்தான் அதிகம் தேவை என்று படம் பார்த்தவர்கள் உரத்து குரல் கொடுக்கின்றனர்.

படத்தின் கதை அனைவரையும் கவர்ந்து விட்டதாக படம் பார்த்தவர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. கத்தி படத்தில் சொன்னது போல இந்தப் படத்திலும் அருமையான கதையை, கருத்தை மக்கள் முன்பு வைத்துள்ளார் விஜய் என்பது படம் பார்த்தவர்களின் கருத்து.

mersal-vijay

மெர்சல் படம் நேற்று உலகெங்கும் தீபாவளி திருநாளையொட்டி ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் படம் வெளியானதால் ரசிகர்களிடையே வழக்கத்தை விட பல மடங்கு எதிர்பார்ப்பு இருந்தது.

நேற்று அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் விஜய்யும், இயக்குநர் அட்லியும் செமத்தியான தீனி போட்டு விட்டதாகவே அவர்களின் முகத்தைப் பார்க்கும்போது உணர முடிகிறது.

அதிகம் படித்தவை:  விஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்!

மெர்சல் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் திருவிழாக் கோலமாக காணப்படுகிறது. ரசிகர்களால் தியேட்டர்கள் அதகளப்படுகின்றன.

mersal peace bro

பல ஊர்களில் தியேட்டர்களுக்குள்ளேயே திரைக்கு முன்பு பட்டாசு வெடித்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியதைக் காண முடிந்தது. படத்தின் தொடக்கக் காட்சி முதல் இறுதி வரை குரல் எழுப்பியபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

படத்தின் தொடக்கக் காட்சி ரசிகர்களை மிரட்டி விட்டதாம். “தளபதி”யின் உடல் கட்டு சூப்பர் என்ற கருத்துக்கள் ரசிகர்களிடமிருந்து பாய்ந்தோடி வருகின்றன.

படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்தியோடு உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளன. ரசித்துப் பார்க்க வைத்து விட்டார் அட்லி என்பது ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.

கத்தியில் விவசாயத்தை கையில் எடுத்தது போல, இப்படத்தில் மருத்துவத்தை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் சொல்லப்பட்ட கருத்து மக்களிடையே சரியான முறையில் ரீ்ச் ஆகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

mersal

படம் வேற லெவல். அட்லி தன்னை ஒரு விஜய் ரசிகர் என்று நிரூபித்து விட்டார். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த மாதிரியான கதையை சிறப்பாக கொடுத்துள்ளார் என்பது ரசிகர்களின் தீர்ப்பாகும்.

அதிகம் படித்தவை:  Theri - Chella Kutti Video Song

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.

இதன் மூலம் விவேகம் , கபாலியின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது மெர்சல் வசூல்.உலகம் முழுதும் மெர்சல் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்.இணைந்திருங்கள் உங்கள் சினிஃப்ளிக்ஸ்-உடன்.