நடிகர் அஜித் நடிக்கும் விவேகம் படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பல்கேரியாவில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் விவேகம் படம் தொடர்பான மற்றொரு தகவல் ஒன்று இன்று வெளியாகி உள்ளது.

பல்கேரியாவில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் வறுமையில் வாடும் அங்குள்ள துணை நடிகர்களை தன் படத்தில் நடிக்க வைத்தாராம்.

தங்கள் நாட்டிற்கு பல நாடுகளில் இருந்து படம் எடுக்க வந்தாலும் அவர்கள் யாரும் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. மேலும் எங்கள் நாட்டிலும் சமீப காலமாக படவாய்ப்பு இல்லாமல் நாங்கள் சும்மா தான் இருக்கிறோம்.

ஆனால் நடிகர் அஜித் எங்கள் மீது மிகுந்த பாசத்துடன் நடந்து கொண்டதாக பல்கேரிய துணை நடிகர் தெரிவித்தார்.