Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்தின் விவேகம் ஆன்லைனில்,அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் விவேகம் ஆன்லைனில்,அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் விவேகம் திரைப்படம் இணையத்தில் முழுமையாக வெளியானதால் ரசிகர்களும், திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து உருவான இந்த திரைப்படதினை அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்குஅதிர்ச்சியூட்டும் விதமாக படம் வெளியாக சில மணி நேரத்துக்கு முன்னதாக சில குறிப்பிட்ட இணையதளங்களில் இந்த திரைப்படம் முழுமையாக வெளியாகி விட்டதாக கூறப்படுகிறது.

பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்த்த விபரமும் தெரிய வருகிறது.அத்துடன் திரை அரங்கத்திலிருந்து ரசிகர்கள் சிலர் தங்களது முகநூல் பக்கத்தில், இப்படக் காட்சிகளை ‘பேஸ்புக் லைவ்’ முறையில் பதிவிட்டு வருகிறார்கள்.இந்த விபரங்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஒருசேர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top