fbpx
Connect with us

Cinemapettai

விவேகம் முதல் நாள் வசூலை, மெர்சலால் முறியடிக்க முடியாது – ஏன் தெரியுமா.???

News | செய்திகள்

விவேகம் முதல் நாள் வசூலை, மெர்சலால் முறியடிக்க முடியாது – ஏன் தெரியுமா.???

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை உள்பட பலநகரங்களில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக டிக்கெட்டுக்கள் புக் ஆகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ‘விவேகம்’ ரிலீஸ் புதிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1090 திரையரங்குகள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் சுமார் 900 திரையரங்குகளுக்கும் அதிகமாக ‘விவேகம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த செய்தி ‘விவேகம்’ படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும், தமிழகத்திலும் அதிக வசூல் என்ற சாதனையை வைத்துள்ள ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை ‘விவேகம்’ முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் விவேகம் படத்தின் முதல் நாள் வசூலை தொட்டு கூட பார்க்க முடியாது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படத்துடன் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் எவ்வளவு முயன்றாலும் மெர்சல் படத்திற்கு 700 அல்லது 750+ அரங்குகளே கிடைக்க வாய்ப்புள்ளது. 900+ அரங்குகளில் வெளியாகும் விவேகம் படத்தின் முதல் நாள் வசூலை 750 அரங்குகளை மட்டும் வைத்துக்கொண்டு மெர்சல் படத்தால் மிஞ்ச முடியாது என்று அடித்து கூறுகிறார்கள் கணித்துள்ளார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.

அதே சமயம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் மெர்சல் படத்தால் ஒதுங்கி கொண்டால் விவேகம் முதல் நாள் வசூலை லபக்கி விடும் என்பதும் ஒப்புக்கொள்ள கூடியதே.

ஆனால், விவேகம் ரிலீசிற்கு வழிவிட்டு பல படங்கள் ஒதுங்கிகொண்டன என்பது குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top