அஜித் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் 24ம் தேதி வெளிவந்த ‘விவேகம்’ படம் முதல் நாளில் ரசிகர்கள் பெரும் தொகை கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகளையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் படம் வெளியான அன்று சுமார் 23 கோடி வரை வசூலித்தது என்று சொல்கிறார்கள்.அதற்கடுத்து மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால், பலரும் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள்.படத்திற்கான விமர்சனங்கள் இருவிதமாக வந்தாலும் படம் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருப்பதால் நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பும் வசூலும் இருந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போஸ் கொடுக்கும் தல, குட்டி தல.

கடந்த நான்கு நாட்களில் ‘விவேகம்’ படம் தமிழ்நாட்டில் ஏரியா வாரியாக வசூலித்த தொகை.
சென்னை – 5.30 கோடி
செங்கல்பட்டு – 12.50
கோவை – 10.70
மதுரை – 9.80
திருச்சி – 7.10
சேலம் – 6.20
நெல்லை – 4.13
வட ஆற்காடு – 5.30
தென்னாற்றாடு – 3.50 கோடி
மொத்தம் – 64.53 கோடி
ஆக, தமிழ்நாட்டில் முதல் வார இறுதியில் ‘விவேகம்’ படம் 64.53 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் தமிழ்நாடு ஏரியா உரிமை 55 கோடிக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அஜித் திரைப்படத்திலேயே இந்த இரண்டு திரைப்படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாம்.! அதுவும் வேற லெவல்

இந்த வாரமும் ‘விவேகம்’ படத்திற்கு நல்ல வசூல் தொடர்ந்தால் அனைத்து ஏரியாக்களிலும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.குறிப்பு – வசூல் விவரங்களைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதியானது.