fbpx
Connect with us

அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின, மணம் திறந்த பிரபல ஸ்டண்ட் நடிகர்.

News / செய்திகள்

அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின, மணம் திறந்த பிரபல ஸ்டண்ட் நடிகர்.

அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இயக்குனர் சிவாவின் காட்சிப்படுத்தல் முறையும் அவரது தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பிறகு தான், அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார், எவ்வளவு பிரபலம் என்பதை தெரிந்துகொண்டேன்.ajith vivegam

படப்பிடிப்பில் மிகவும் எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்‌ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ‘டூப்’ வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் திறம்பட செய்து அசத்தினார். அவர் கடின உழைப்பாளி.

படப்பிடிப்புக்கு இடைப்பட்ட நேரங்களில் அவருடன் உரையாடியது என் மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள்” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top