அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விவேகம். இப்படம் கடுமையான விமர்சனம், நல்ல வசூல் என செல்ல, அடுத்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.

பலரும் அஜித்தின் அடுத்தப்படமும் சிவா தான் என கூறி வருகின்றனர். விவேகம் கிளைமேக்ஸில் கூட AK-58 லோடிங் என்று ஒரு வாசகம் வரும்.Siva-and-ajith

அதை வைத்து கண்டிப்பாக அடுத்தப்படத்தை இயக்கப்போவது சிவா தான் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விவேகம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி ‘தலயுடன் அடுத்தப்படம் செய்வீர்களா? என்றால், கண்டிப்பாக அவருடன் எத்தனை படம் வேண்டுமானாலும் வேலை செய்வேன்.

ஆனால், அடுத்தப்படத்தை அவர் தான் அறிவிக்க வேண்டும், மேலும், இதே கூட்டணி மீண்டும் அமைந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

விவேகம் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அடுத்தப்படத்தில் இருக்காது’ என கூறியுள்ளார்.