Vivegam-Ajith

அஜித் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் அதிக டிமாண்ட் என தெரிகின்றது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் மதுரை மற்றும் கோயமுத்தூர் உரிமையை RockFort Entertainment-யை சார்ந்த முருகானந்தம் என்பவர் கைப்பற்றியுள்ளார்.

மேலும், முக்கியமான இடங்களான சென்னை மற்றும் செங்கப்பட்டு ஏரியாக்களை கைப்பற்ற பல பேர் போட்டிப்போட்டு வருகின்றனர்.