Connect with us

Cinemapettai

விவேகம் படத்தை கேவலமாக பேசிய ப்ளூ ஷர்ட் மாறன்!

maaran review vivegam

Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் படத்தை கேவலமாக பேசிய ப்ளூ ஷர்ட் மாறன்!

தமிழ் சினிமா வெளிவந்த உடன் நாம எல்லாரும் செய்யுற முதல் வேலை அந்த படத்தை பத்தி என்ன விமர்சனம் வந்திருக்குன்னு பார்குறதுதாங்க. பல விமர்சகர்கள் படத்தை உன்னிப்பாக கவனித்து நிறை குறை சொன்னாலும் சில பேரு அரைகுறையா பார்த்துட்டு பப்ளிசிட்டிக்காக படத்தையும் ஹீரோவையும் திட்டுறதை வழக்கமாக வைச்சுருக்காங்க.

அப்படி எல்லா படத்தையும் ஏளனமாக பேசகூடிய விமர்சகர்தாங்க நம்ம தமிழ் டாக்கீஸ் நீல சட்டைக்காரர். இவரு நல்லாருக்குன்னு எந்த படத்தையும் மனசார சொன்னதில்லை.

prashanth-tamil talkiess-blue-shirt-reviewஇப்போ இவர் விமர்சனம் செஞ்சுருக்க விவேகம் படம் தல ரசிகர்களிடையே பெரிய கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் எற்படுத்திருக்கு. அந்த அளவுக்கு “விவேகம் படத்தை வெட்கம் கெட்ட படம், கேவலமான படம், அஜித் பெரிய ஜேம்ஸ் பாண்டு மாதிரி நினைச்சுகிட்டு முதல் சீன் நடிச்சுருக்காரு.

விவேக் ஓபராய் மாதிரி ஒரு குப்பை வில்லனை பார்த்ததில்லை, டைரக்டர் சிவா கவுத்திடாரு. அஜித் காஜலுக்கு அப்பா மாதிரி இருக்காரு, அஜித் ரசிகர்கள் படத்தை நல்லா இருக்குனு விமர்சனம் செய்ய சொல்லி போன் பண்றாங்க, படம் மொக்கைனு அவுங்களுக்கே தெரிஞ்சாலும் சுமாரா இருக்குனு சொல்ல சொல்றாங்க” இப்படி வாய்க்கு வந்தபடி படத்தை கேவலமா பேசிருக்காரு.

ajith vivegamஇந்த விமர்சனத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் பலபேரு கெட்ட கெட்ட வார்த்தைகள்ல காது கருகுற அளவுக்கு கமென்ட் போட்டு திட்டிட்டு இருக்காங்க.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரு திரைப்படம் எப்படி இருந்தாலும் அதை கேவலமாக பொது இடத்தில் பேசும் உரிமை எவருக்கும் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top