வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  வஞ்சகர் உலகம் படத்தின் 'கண்ணாடி நெஞ்சன்', 'கிறுக்கன்' வீடியோ பாடல் !

இப்படத்தின் டீசர் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை இடம்பெறுகிறது.