7,300 கோடி ரூபாய் அள்ளிக்கொடுத்த பிரபலம்.. அம்பானியை மிஞ்சிய மனசு யாருக்கு வரும்

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சமீபகாலமாக பேசக்கூடிய விசயம்தான் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்பது. இது ஒரு வகையான பணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனை எப்படி பயன்படுத்துவது எப்படி சம்பாதிப்பது என்பது பலரது கேள்வியாக தற்போது உள்ளது. இந்தியாவில் இது சாத்தியமா என்பது முதலில் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் நாளடைவில் இந்தியாவிலும் இது பயன்படுத்தலாம் என அறிவித்தனர்.

இந்தியா தொடர்ந்து கொரோனா இரண்டாம் நிலை படு தீவிரமாக பரவி பல மக்களை பாதித்து வருகிறது அதற்காக அரசு கொரோனா தடுப்பூசி மற்றும் பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாத்து வருகிறது.

vitalik buterin
vitalik buterin

இப்படியிருக்கும்போது தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் கூகுள் நிறுவனம் 130 கோடி ரூபாயும், ட்விட்டர் நிறுவனம் 110 கோடி ரூபாயும் நன்கொடையாக கொடுத்துள்ளது.

ரஷ்யாவில் பிறந்து கனடாவில் வசித்து வரும் விட்டாலிக் என்பவர் 19 வயதில் கிரிப்டோகரன்சி உருவாக்கியுள்ளார். தற்போது இவர் உலக பணக்காரர்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவிற்காக கிட்டத்தட்ட 7,300 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளார். தற்போது இவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அம்பானி இந்தியாவில் பல தொழில்கள் செய்து மக்கள் மூலம் இந்தியா பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் இவர் இந்தியாவிற்கு இன்னும் கை கொடுக்கவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அம்பானி கொரோனா விற்காக 2020ஆம் ஆண்டு 500 கோடி நன்கொடை வழங்கினார் ஆனால் 2021 ஆம் ஆண்டு கட்டுக்கடங்காமல் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் அம்பானி எதுவும் செய்யவில்லை என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே கொரோனாவிற்காக அதிக நன்கொடை கொடுத்தது டாடா நிறுவனரான ரத்தன் டாட்டா 1,800 கோடி ரூபாய் இந்திய மக்களுக்காக கொடுத்தார். அப்போது கூட அம்பானியை விட ரத்தன் டாட்டா தான் அதிகமாக நன்கொடை கொடுத்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்