Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் ட்ரைலர் பார்த்து வெறி ஏத்திய ரசிகர்.. முரட்டு வீடியோ

விஸ்வாசம் ட்ரைலர் பார்த்து வெறி ஏத்திய ரசிகர்
அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர்கள் சாதனை படைத்து வந்த நிலையில். தற்போது டிரைலரின் ரியாக்ஷன் வீடியோஸ் வைரலாகி வருகிறது. இப்படத்தில் இமான் இசையில் வெளிவந்த ட்ரெய்லரை ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள படத்திற்காக அவரவர் பங்கிற்கு ஏற்ப ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். ட்விட்டர் பக்கத்திலும் மற்றும் சமூக வலை தளங்களில் அன்றாடம் இதை பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை ரசிகர்கள் ஆவலோடு கண்காணித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது reactions வீடியோஸ் ஷேர் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு நபர் ஒருவர் விஸ்வாசம் படத்தின் டிரைலரை பார்த்த ரியாக்சன் வீடியோவை அவர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை சேர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு எல்லா நடிகர்களுக்கும் வெளிநாட்டில் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது அஜித்திற்கும் வெளிநாட்டில் ஒருவர் வீடியோ போட்டது பெரிதும் ட்ரென்ட் ஆகிவருகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இவர் இந்த படம் மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு வீடியோ பண்ணியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் ஒரு பிரீவியூ தியேட்டரில் ஷாலினி சிறப்பு காட்சி பார்த்துள்ளார். இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக பரவி கொண்டே செல்ல, அஜித் ரசிகர்கள் தல வந்திருப்பார் என பெரும் கூட்டம் கூடிவிட்டனர்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினி ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சில இடங்களில் விஸ்வாசம் ஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகிறதாம்.

shalini-viswasam
