fbpx
Connect with us

Cinemapettai

தல ஸ்டைலில் உருவாக்கப்பட்ட தலைவர்168 பாடல்.. குத்தாட்டம் போட்ட ரஜினி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல ஸ்டைலில் உருவாக்கப்பட்ட தலைவர்168 பாடல்.. குத்தாட்டம் போட்ட ரஜினி

தலைவர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர்168 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எவர்கிரீன் நாயகிகளான குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் காமெடியன்களாக சூரி, சதீஷ் ஆகியோரும் இணைந்து உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்த பாடல் விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட்டடித்த தூக்குதுரை பாடல் போன்று கிராமத்து பின்னணியில் உருவான டப்பாங்குத்து ஸ்டைல் ஆகும். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தலைவர்168 படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. வேகமாக நடந்துவரும் இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை 2020 தீபாவளிக்கு முன்னரே வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top